வடவை மாதா குரலொலி

தமிழ்நாட்டின் தென்கோடி மாவட்டம் திருநெல்வேலியில் காவல்கிணறு விலக்கிலிருந்து இரண்டு கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது வடக்கன்குளம். இறைமகன் இயேசுவின் தாயான புனித கன்னிமேரி பரலோகமாதாவாக காட்சியளிக்கும் இந்த ஊரை இதன் கோவிலழகு மற்றும் பக்தி முயிற்சிகளின் காரணமாக சின்ன ரோமாபுரி என்றும் அழைப்பர்.கி.பி.1803 ஆம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி இந்த தேவாலயத்திலமைந்திருந்த மாதா சுரூபம் கரம் விரிந்த நிலையில் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நடந்தபடியால் காட்சி கொடுத்த மாதா என்றும் அழைக்கின்றனர். அன்னையை வேண்டுவோருக்கு ஆயிரமாயிரம் அற்புதங்கள் நிகழ்வதால் ஆகஸ்டு 15ம் தேதி திருவிழாவிலும் அன்று அதிகாலையில் நடைபெறும் தேரோட்டத்தையும் காண அண்டை மாநிலமான கேரளா உட்பட பல இடங்களிலிருந்து சுமார் ஒரு லட்சம் பேர் இங்கு கூடுகின்றனர். இந்த வடவை மாதாவின் புகழ் பரப்பும் நோக்கில் 1989 லிருந்து ஆரம்பித்து வருடத்திற்கு ஒரு இதழ் என்கின்ற ரீதியில் 27 இதழ்கள் இதுவரை வெளிவந்துள்ளன.

வடவை மாதா குரலொலி புத்தகங்கள்

வடவை மாதா குரலொலி - 2022